• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நடுரோட்டில் அரபிக் குத்து பாட்டுக்கு நடனம் ஆடிய போதை ஆசாமி – மதுரையில் பரபரப்பு

ByA.Tamilselvan

May 18, 2022

மதுரையில் சென்டர் மீடியனில் மது போதையில் யோகாசனம் செய்த நபரால் பரபரப்பு
நடுரோட்டில் அரபிக் குத்து பாட்டுக்கு போதையில் வாகனங்களை மறித்து நடமாடிய ஆசாமி; சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்.
மதுரையில் வாகன போக்குவரத்து பரபரப்பாக இயங்கும் பிரதான சாலையான மேல வெளி வீதியில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் செல்லும் முக்கிய சாலையாக உள்ளன. சாலையின் மையப்பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் மது போதையில் இருந்த ஆசாமி சாவாசனம் செய்தவாறு கை கால்களை நீட்டி சாவகாசமாக படுத்து உறங்கி உள்ளார்.
இரண்டு புறச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே உயிருக்கு ஆபத்தான வகையிலும், தூக்கத்தில் புரண்டு சாலையில் விழும் நிலையில் இருந்த நபர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக அங்கையே யோகாசனம் செய்வது போல் படுத்து இருந்த நபரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மதுரை திலகர் திடல் போலீசார் பாதுகாப்பு கருதி அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து அந்த நபரை எழுப்பினர். அந்த நபர் போலீசாரை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி அவரிடம் பேச்சு கொடுத்தவாறு வேறு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பிறகு அதேபகுதியில் மற்றொரு போதை ஆசாமி ஒருவர் உச்சகட்ட மதுபோதையில் தள்ளாடியபடியே வந்த நபர் திடீரென சாலையில் நின்று அரபி குத்து பாடல் பாடியவாறு நடனங்கள் ஆடி போக்குவரத்திற்கு இடையூறு செய்தவாறு இருந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.