• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இந்த நாள்

Byகாயத்ரி

Feb 25, 2022

சதுரங்க கிராண்டு மாஸ்டர் சேதுராமன் பிறந்த தினம்

இந்திய சதுரங்க கிராண்டு மாஸ்டர் சேதுராமன் என்கிற பனையப்பன் சேதுராமன்.சதுரங்க விளையாட்டில் தேர்ந்த இவர் சிங்கப்பூரில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியையும், துருக்கியின் அண்டால்யாவில் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்டோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியையும் வென்றார். நார்வேயில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 41 ஆவது சதுரங்க ஒலிம்பிக்கில் இந்தியக் குழுவிற்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார். மேலும், இந்திய தேசிய முதல்நிலை சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இப்போட்டியின் முதல் சுற்றில் உருசிய கிராண்டு மாஸ்டர் சனான் சுயுகிரோவ்வையும் இரண்டாவது சுற்றில் சகநாட்டு கிராண்டு மாசுட்டர் பென்டலா அரிகிருட்டிணனையும் வீழ்த்தினார். மூன்றாவது சுற்றில் சாக்கிரியர் மாமேத்யாரோவிடம் விழ்ந்தார். 2016 ஆம் ஆண்டு உசுபெக்கித்தான் நாட்டின் தாசுகண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார். 2018 பிப்ரவரியில் நடைபெற்ற ஏரோபிளாட்டு சதுரங்கப் போட்டியில் 6.5/9 புள்ளிகள் எடுத்து விளையாடிய 92 நபர்களில் சேதுராமன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.இப்படி பல சாதனைகளை சதுரங்க விளையாட்டில் தடம் பதித்த சேதுராமன் பிறந்த தினம் இன்று..!