• Fri. Jun 2nd, 2023

தமிழகத்தில் அ.தி.மு.க.வை அழித்து விட்டு, எதிர்க்கட்சியாக செயல்படத் துடிக்கும் பா.ஜ.க..,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பேட்டி..!

தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு எதிர்கட்சியாக பாஜக செயல்பட அண்ணாமலை எண்ணுகின்றார் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.


சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில், தீரன் தொழிற்சங்க பேரவையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் எவ்வித அரசியல் காழ்புணர்ச்சியே பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை என்று கூறினார். பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் அதிமுக அழித்துவிட்டு எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட வேண்டும் என அண்ணாமலை எண்ணுகின்றார். இது போன்ற நடவடிக்கை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சொல்லாது எனவும் தமிழக மக்களில் தேவைகளை அறித்து மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு வழங்கிய கோரிக்கைகளை பெற்று தரவேண்டும் என்றார்.


தமிழகத்தில் முதல்வர் குறித்து அவதூறு பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தார். கொங்கு மண்டலத்திற்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *