• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அன்னதானம் செய்து வரும் தனியார் பவுண்டேஷன் நிறுவனர் பேட்டி..,

ByM.I.MOHAMMED FAROOK

Mar 8, 2026

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு சனீஸ்வரபகவான் அபயஹஸ்த மூர்த்தியாக தனிசன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

பரிகார ஸ்தலமாக இது விளங்குவதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆயிரகணக்கான பக்தர்கள் உள்ளுர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவின் போது ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வார்கள்.

இந்த ஆண்டு இன்று (06.03.2026) காலை 8.24 மணிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார். அப்போது சனிபகவானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வைரஅங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது சனிபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வசந்த மண்டபத்தில் தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் (உற்சவர்) பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் சனிப்பெயர்ச்சி முடிந்தது முதல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.

  ஹைதராபாத் துளசம்மா சாரிட்டபிள் பவுண்டேஷன்  நிறுவனர் ராமு ஏற்பாட்டில் தொடர்ந்து  4 சனிப்பெயர்ச்சியாக ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேர் வீதம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வழங்கி வருகிறார். அதுபோல இந்த ஆண்டும்தரமாக தயாரிக்கப்பட்ட உணவுகளை சனீஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தொடர்ந்து மூன்று வேலையும் வழங்கி அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது இந்த ஆண்டு சனி பெயர்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றதாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை முறையான ஏற்பாடுகள் செய்திருந்ததாகவும் இந்த ஆலயத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் நினைத்தவை நிறைவேறும் எனவும் தனக்கு ஏற்கனவே கேட்டது கிடைத்துள்ளதாகவும் அதனாலயே தொடர்ந்து நான்கு சனி பெயர்ச்சிகளாக அன்னதானத்தை சேவையாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.