பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். யூடியூபில் வருகின்ற செய்திகள் பேசுவதை எல்லாம் செய்திகள் என்று எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் அவர்.

எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தான் ஒன்றிய அரசு சிறந்த சேவகர் என்று நிரூபித்துக் கொண்டு வருகிறார்.
ஒன்றிய அரசுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் குறுக்கே விழுந்து தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒன்றிய பாஜக அரசு காப்பாற்றி வருகிறார்.
அது டிஜிபி விவகாரத்திலும் நடந்துள்ளது.








