புதுக்கோட்டையில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் ஏற்பாட்டில் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதான விழா மற்றும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு தேசியக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய முன்னாள் உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி.ஆனந்த் ஏற்பாட்டில் புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பல்வேறு இனிப்பு வகைகளுடன் அன்னதானம் வழங்கி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ள சேவா சங்கல்ப் அபியான் திட்டத்தில் கட்டட மற்றும் தச்சு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பணி உபகரணங்களையும் நலத்திட்ட உதவிகளையும் பாஜக தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் ஏவிசிசி கணேசன் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆதி இந்தியா பவுண்டேஷன் தலைவர் திருமதி மல்லிகா கணேசன் மற்றும் நிர்வாகிகள் பணியாளர்கள் செய்திருந்தனர்.









