• Fri. Feb 13th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..,

ByP.Thangapandi

Feb 1, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டாக்டர் ராம்பிரசாத் – அபினா தம்பதியின் திருமண வரவேற்பு விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.,

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.,

நாளை இந்தியாவே எதிர்பார்க்கின்ற வகையில் மிக பிரமாண்டமான ஒரு பட்ஜெட், இந்திய மக்களுக்காக மட்டுமல்ல, தமிழ்நாடு மக்களுக்காகவும்., நமது முதல்வர் எப்போது பார்த்தாலும் தமிழக மக்களுக்கு ஒன்றும் தரவில்லையே, தரவில்லையே என சொல்லி கொண்டிருக்கிறார்., இதுவரை 11 ஆண்டு காலத்தில் 14 லட்சம் கோடி தந்துள்ளார்கள்., இன்னும் நிறைய இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்., நல்லதே நடக்கும்.,

கரூரில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, திமுக ஆட்சிக்கு வந்த பின் அவருக்கு எதிராக எந்த செயல் நடந்தாலும் சரி, திமுக மாவட்ட செயலாளர், திமுக அமைச்சர்களுக்கு எதிராக எந்த செயல் நடந்தாலும் சரி உடனடியாக அவர்கள் தாக்கப்படுகிறார்கள்., எந்த விதமான பாதுகாப்பும் இல்லை., ஊடகங்கள் அதிகமாக சர்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களையும் தாக்கி கொண்டிருக்கிறார்கள்., ஆகவே அதை புரிந்து கொண்டு, நல்ல செய்திகளை நாட்டிற்கு தர வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.,

ஹச்.ராஜா அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று அவரது உடல்நலம் நன்றாக தேறி வருகிறது., எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்., வெகு விரைவில் பூர்ண குணமடைந்து வருவார், அவருக்காக இறைவனை பிராத்திக்கிறேன்., என பேட்டியளித்தார்.,