ஏற்கனவே போன் மூலமாக ஓபிஎஸிடம் பேசிக் கொண்டுதான் இருந்தேன்..
அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு ஓபிஎஸ் இடமும் தினகரன் இடமும் போனில் ஏற்கனவே பேசி இருந்தேன்.

சட்டமன்றத்தில் சந்திக்கும் போது மற்றும் போனிலும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் அவர்களுக்கு வேறு எதுவும் பிரச்சனையா என்பது தெரியவில்லை.
மோடியை சந்திக்க அனுமதி தரவில்லை என்பதால் தான் வெளியேறியதாக கூறப்படுகிறது குறித்த கேள்விக்கு?
என்னிடம் சொல்லியிருந்தால் நான் சந்திக்க அனுமதி வாங்கி தந்திருப்பேன்..
இபிஎஸ் அழுத்தத்தால் தான் ஓபிஎஸ் வெளியேறினாரா?
என்று கேள்விக்கு அப்படி ஒன்றும் இல்லை ஓபிஎஸ் அப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது அதுக்கு நான் கருத்து சொல்லவில்லை. உங்களுக்கு பலவீனமா இல்லையா என்ற கேள்விக்கு அது தேர்தலில் தான் தெரிய வரும்..

மோடி மீண்டும் தமிழக வரும்போது ஓபிஎஸ் சை சந்திக்க வைக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு. ஒ பி எஸ் தரப்பில் இருந்து கேட்டால் கண்டிப்பாக சந்திக்க வைப்போம் என நைனார் நாகேந்திரன் கூறினார்.