• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டி…

ByPrabhu Sekar

Mar 23, 2025

சென்னை விமான நிலையத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டி அளித்துள்ளார்.

எந்த திட்டமும் இல்லாமல் நேற்றைய கூட்டம் நடந்ததாக அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு..,

இங்கு அண்ணாமலை சொன்னது முக்கியமானதில்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த நாட்டுக்கு என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, அவர் கட்சி அவருக்கு கொடுத்த வேலை மட்டுமே செய்கிறார். அவர் மாநிலத்திற்கு உண்மையாக இல்லை, அவர் கட்சிக்கு மட்டுமே உண்மையாக இருக்கின்றார். அவர் வேலையை செய்யட்டும் என்றார்.

மாநில சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு..,

இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசி இருக்கின்றார். இந்த பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். முதலில் நமது ஒருங்கிணைந்த குரலை வலுவானதாக்குவோம். அதன் பிறகு நாடாளுமன்றம் குறித்து பேசலாம் என்றார்.

தேசிய கட்சியான காங்கிரஸ் இதை ஏன் முன்னெடுக்கவில்லை என்ற கேள்விக்கு..,

இங்கு மாநிலத்தில் காங்கிரஸ் இருக்கின்றார்கள். இது திமுக அரசு ஏற்பாடு செய்த கூட்டம். 40 முதல் 50 அரசியல் கட்சிகளை தமிழக முதலமைச்சர் அழைத்திருந்தார். தென்னிந்தியாவை சேர்ந்த அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். ஒரிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை சேர்ந்ததவர்களும் கலந்து கொண்டார்கள். அவர்கள் பணியை செய்கின்றார்கள் என்றார்.