• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சர்வதேச வேட்டி தின விழா கொண்டாட்டம்

Byதரணி

Jan 7, 2023

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை சர்வதேச அரங்கில் பெருமைப்படுத்தும் விதமாக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சர்வதேச வேட்டி தின விழா கொண்டாடப்பட்டது.
அந்தந்த நாட்டில் நிலவும் தட்பவெப்பம், சூழல், பண்பாடு,தொழில் முறை, முதலியவற்றை குறிக்கும் விதமாகவே உடைகள் உருவாகின. அப்படி தமிழகத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ற உடையாக வேட்டி இருந்ததினால் தமிழர்கள் வேட்டியை உடுத்த துவங்கி உள்ளனர். முற்காலத்தில் வேட்டி காழகம் என்று அழைக்கப்பட்டுள்ளது.காழகம் என்பதற்கு அரையில் கட்டப்படும் ஆடை என்பது பொருள். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற சங்க கால தமிழ் நூல்களில் தமிழர்கள் வேட்டி உடுத்தி வாழ்ந்தனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மனிதன் அணிந்திருக்கும் உடையை வைத்து அந்த மனிதன் எந்த நாட்டைச் சார்ந்தவன் என்பதை குறிப்பிட முடியும். அந்த வகையில் வேட்டி கட்டி இருந்தால் அவன் தமிழன் என்ற அளவிற்கு வேட்டி சர்வதேச அரங்கில் தமிழர்களின் உடையாக உருவாகி உள்ளது. சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்த நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு மோடி அவர்கள் வேட்டி சட்டையில் வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை சர்வதேச அரங்கில் பெருமைப்படுத்தும் விதமாக கல்வியாளர். முனைவர். குணசேகர் அரிய முத்து ஏற்பாட்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச வேட்டி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சர்வதேச வேட்டி தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் கல்வியாளர் முனைவர் குணசேகர் அரிய முத்துவுடன் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக துணைத் தலைவர் எம். சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சர்வதேச வேட்டி தினத்தை சிறப்பித்தனர்.மேலும் நிகழ்வில் பென்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் வீரமணி, ரவீந்திர சைலபதி, மாறன் பன்னாட்டு மாணவர் பேரவை அமைப்பின் நிர்வாகிகள் அஸ்வின், சங்கர், சிவக்குமார், ஆரோன், சுஜிதா, ரட்சிதா,திவ்ய பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.