• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

காவலர் குடியிருப்பில் உலக மகளிர் தின விழா..,

ByPrabhu Sekar

Mar 12, 2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலக்கோட்டையூர் ஊராட்சி ஒன்பதாவது வார்டில் உள்ள காவலர் சொந்த இல்ல குடியிருப்பு வளாகத்தில் சிறப்பான மகளிர் தின விழா நடைபெற்றது.

உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் மேலக்கோட்டையூர் காவலர் சொந்த இல்ல குடியிருப்பு சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி தலைவர் ஆதிலிங்கம், துணைத் தலைவர் பிச்சை ஆதிலிங்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்துள்ள வெற்றிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தில் எவ்வாறு சாதிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழரசி விமாலன், திருமதி தேவி குருநாதன், பொறுப்பாளர்கள் அஜய் சந்திரசேகர் மற்றும் ரேகா கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றம் குறித்து சிறப்புரை ஆற்றினர்.

இதனைத் தொடர்ந்து பெண்கள் காவல்துறை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்துள்ள முன்னேற்றங்கள் குறித்து பேசப்பட்டது. மேலும் அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறு குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நடனங்கள் இடம்பெற்றன.

விழாவின் இறுதியில் கலந்து கொண்ட அனைத்து மகளிரும் கேக் வெட்டி மகளிர் தின மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மேலக்கோட்டையூர் காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.