• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி அருகே நாடான்குளத்தில் உலக மகளிர் தின விழா..,

கன்னியாகுமரி அருகே நாடான்குளத்தில் இன்று உலக மகளிர் தின விழா 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது. சவுமியசன அன்புமணி வழங்கினார்.

ஜெயம் ஒருங்கிணைந்த தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின விழா இன்று (மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு நாடான்குளத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சக்தி மகளிர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் இ.சாந்தினி பகவதியப்பன் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெமோ தலைமையுரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் மற்றும் பசுமை தாயகம் அமைப்பாளர் திருமதி சவுமியா அன்புமணி கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி சீனிவாசன், மயிலாடி பேரூராட்சி தலைவர் விஜயலெட்சுமி பாபு, தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதாராணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

முடிவில் ஆரோக்யபுரம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஜெயகுமாரி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் தாமரை தினேஷ், ஜெஸீம், பேரூர் கழக செயலாளர் சிவபாலன், அக்‌ஷயா கண்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.