• Sat. Apr 26th, 2025

பன்னாட்டுக் கருத்தரங்கு விளம்பர வெளியீட்டு விழா

BySeenu

Jan 31, 2025

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகின்ற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விளம்பர பலகை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், “சிந்தனைக் கவிஞர் கவிதாசன் படைப்புலகம் பன்முக ஆய்வு” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

இது குறித்த விளம்பர பலகை வெளியீட்டு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய சிந்தனை கவிஞர் கவிதாசன் கூறியதாவது..

தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் மிக்கவராக தன்னை தேர்வு செய்துள்ளதற்க்கு நன்றிகளை தெரிவிப்பதாகவும், நான் இதுவரை 60″க்கும் மேற்பட்ட கட்டுரைத் தொகுப்புகள், 25″க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், தன்னம்பிக்கை மேடைப் பேச்சுகள், கவியரங்கப் பதிவுகள், இலக்கியம், இலக்கிய அமைப்புகள் மூலம் புதிய படைப்பாளர்களை உருவாக்கியுள்ளதாகவும், எனவே தனது படைப்புகளை கருவாகக் கொண்டு இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பேராசிரியர்கள், பல்துறை ஆய்வாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இக்கருத்தரங்கிற்காக தங்களது கட்டுரைகளை வழங்கலாம் என கூறினார்.

கட்டுரையாளர்ககள் எவ்வித பதிவுக்கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று கூறியவர் கருத்தரங்கு நாளன்று மதிப்பீட்டாளர்களால் தேர்வு செய்யபடும் சிறந்த 10 கட்டுரைகளுக்கு தலா ரூ.10,000 பரிசுத்தொகையும் வழங்கபடும் என்றார்.

பல்துறை சாதனையாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் பல விருதுகளும், சான்றிதழ்களும் வழங்க உள்ளதாகவும், கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் பொழுது, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவர் முனைவர் சித்ரா, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.