விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை 11 30. மணி அளவில் சர்வதேச வெண்கோல் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகள் சங்க உறுப்பினர்கள் ( கண் பார்வையற்றவர்) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் J.ரேணுகாதேவி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் C, முகேஷ் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் நடராஜன் பேசுகையில், அரசு வேலை வாய்ப்பில் அதிக இட ஒதுக்கீடு, வெண்கோல் ஸ்டிக் , பார்வையற்றோர் கைக்கடிகாரம், விசேஷ லென்ஸ், போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ஆரோக்கியராஜ் மாவட்ட குழு உறுப்பினர்கள் இந்துமதி, ராதிகா, கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர், இறுதியாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்து விட்டு சென்றனர்.