ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் டிசம்பர் 15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம், ஈரான், ஜப்பான், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் பல்வேறு தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்ததுடன், தனது சர்வதேச எல்லைகளையும் பல்வேறு நாடுகள் முடியுள்ளன.
இந்தநிலையில், ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் டிசம்பர் 15 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை தொடங்கப்படாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ” சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான சரியான தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு பாதிப்பு இதுவரை 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன.