

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையை ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை நேற்று லெப்டினண்ட் ஜெனரல் அருண் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவியவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் பங்கேற்றார்.
இவரைத் தொடர்ந்து, விமானப்படை ஏர் மார்ஷல் மன்வீந்தர் சிங் தலைமையிலான வல்லுநர் குழு விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தது. இந்நிலையில், குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் இருந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை வெட்டி எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
