உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க கூடிய உணவு பொருட்களில் நெருக்கடி ஏற்படும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சமையல், எண்ணெய் மாவு பொருட்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரியு போல் நகரில் ரஷியாவின் வசம் சிக்காமல் இருந்த உக்ரைன் படைவீரர்கள் 2000 பேர் சரணடைந்துள்ளனர் என்று ரஷ்ய ராணுவ மந்திரி செர்ஜி ஷெய்கு தெரிவித்துள்ளார். இந்த நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்து விட்டது. அதுமட்டுமில்லாமல் தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறாத நிலையில், ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து லுஹாஸ்க் பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியப் படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர் என்று பிராந்திய கவர்னர் செர்கிய் ஹைடாய் தெரிவித்துள்ளார். அங்கு 60க்கும் மேற்பட்ட வீடுகள் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் செவிரோடொணெட்ஸ்க் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வெற்றி பெறவில்லை, ரஷ்ய படை வீரர்களுக்கு இழப்பு ஏற்பட்ட அவர்கள் பின்வாங்கினர் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைப் போலவே டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது என்றும் அங்கு நரகம் போல நிலைமை உள்ளது. இது மிகைப்படுத்தி கூறப்பட்ட வார்த்தைகள் அல்ல என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகளின் முன்னேற்றத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த கூடிய வகையில் செவிரோடொனெட்ஸ்க் மற்றும் ரூபீஸ்னே நகரங்களுக்கு இடையே இருந்த ஒரு பாலத்தை உக்ரைன் படையினர் அழைத்துள்ளனர்.
இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. ரஷ்யப் படைகளின் 14 தாக்குதல்களை முறியடித்ததாகவும், 8 டாங்குகளையும் அளித்துள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய படைகளை எதிர்த்துப் போரிடுவதற்காக அமெரிக்கா உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான போர் தளவாடங்கள், ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை வெளியிட்டுள்ளார். மேலும் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் இராணுவ உதவிகளையும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு 40 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் ஏற்கனவே நிறைவேறிவிட்டது.