• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பால் குடித்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு..,

ByR.Arunprasanth

Jun 19, 2025

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காந்திநகர் அன்னை இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 33) அவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிந்தாமணி (வயது 28) இவர்களுக்கு லித்திகா என்ற ஆறு வயது மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 13 நாட்களுக்கு முன்பு சிந்தாமணிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

சிந்தாமணிக்கு காசநோய் இருந்ததால் குழந்தை பிறந்த கையோடு தாம்பரம் காச நோய் மருத்துவமனையில் கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்று நேற்று மாலை குழந்தையுடன் வீடு திரும்பினார்..

இரவு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு படுக்க வைத்திருக்கிறார்
சிறிது நேரத்தில் குழந்தை அசைவு இல்லாமல் இருந்துள்ளது உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற போது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்ததுவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக குழந்தையின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தையின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடற்கூறு ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை மூச்சு திணறலால் இருந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாய்ப்பால் குடித்த போது பிறந்து 13 நாளே ஆன ஆண் குழந்தை இறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.