• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்திய பிராமின்களின் பூர்விகம் ரஷ்யா அவங்களை அங்க அனுப்புங்க -ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்

ByA.Tamilselvan

May 2, 2023

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் பிராமின்களின் பூர்விகம் ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் என்றும் இந்தியா இல்லை என பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த கட்சியினரிடையே பேசும் போது, டிஎன்ஏ டெஸ்ட்-இல் பிராமின்களின் பூர்விகம் ரஷ்யா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் என்றும் இந்தியா இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இத்துடன் பிராமின்கள் நம்மிடையே பிரிவினை ஏற்படுத்தி நம்மை ஆள முயற்சி செய்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். மக்கள் பிராமின்களை அவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்கே அனுப்ப வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“டிஎன்ஏ பரிசோதனையில் பிராமின்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் ரஷ்ய பூர்விகம் கொண்டவர்கள் ஆவர். தற்போது அவர்கள் இங்கு செட்டில் ஆகிவிட்டனர். பிராமின்கள் நம்மை பிரித்து ஆட்சி செய்ய முயற்சித்து வருகின்றனர். நாம் அவர்களை இங்கிருந்து துரத்த வேண்டும்,” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் யதுவன்ஷ் குமார் யாதவ் தெரிவித்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.