• Sat. Apr 27th, 2024

கள்ளழகர் மதுரை புறப்பாடுபோக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம்

ByKalamegam Viswanathan

May 3, 2023

மதுரையிலிருந்து அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல் மற்றும் அப்பன்திருப்பதி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் 03.05.2023-ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மதுரை -அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

  1. கேரளா நீட் அகாடமி – நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம்.
  2. மாங்காய் தோட்டம் – டாடா ஏஸ் மற்றும் சிறிய ரக சரக்கு வாகனம் நிறுத்துமிடம்.
  3. பொய்கைகரைப்பட்டி தெப்பம்(தற்காலிக பேருந்து நிலையம்) இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் – பயணியர் பேருந்துகள் வந்து செல்லுமிடம்.
    03.05.2023-ஆம் தேதி மதுரையிலிருந்து அழகர் கோவிலுக்கு வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பிற்பகல் 3.30 மணி வரை அழகர் கோவில் வளாகத்திற்குள் வந்து செல்லலாம்.
    03.05.2023-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மதுரையிலிருந்து அழகர் கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் (அரசுப் பேருந்துகள் உட்பட) மதுரை-அழகர்கோயில் சாலையில் கடச்சனேந்தல் வந்து இடதுபுறம் திரும்பி ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி வழியாக பொய்கைகரைப்பட்டி தெப்பம் வந்து அங்குள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, திரும்பி சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல் வழியாக மதுரை செல்ல வேண்டும்.
    மேலூரிலிருந்து அழகர் கோவில் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் 03.05.2023-ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மேலூர் -அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
    1.அம்மன் மகால் அருகே – இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம்.
    2.பிரகாஷ் அய்யர் கார்டன் (மகாத்மா மாண்டிசோரி பள்ளிசந்திப்பு ) -இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம்.
    3.முத்துலெட்சுமி ரைஸ்மில் பார்க்கிங் – இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம்.
    4.ஐஸ்வர்யா கார்டன்
    (தற்காலிக பேருந்து நிலையம்) – நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் மற்றும் பயணியர் பேருந்துகள் வந்து செல்லும் இடம்.
    5.நாகம்மாள் கோயில் அருகே – நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம்.
    03.05.2023-ஆம் தேதி மேலூரிலிருந்து அழகர்கோவிலுக்கு வரும் அரசுப்பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் பிற்பகல் 3.30 வரை அழகர்கோயில் வளாகம் வரை வந்து செல்லலாம்.
    03.05.2023-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்குமேல் மேலூர் சாலையில் ஐஸ்வர்யா கார்டன் பார்க்கிங் அருகே உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு அங்கிருந்து திரும்பி மீண்டும் மேலூர் செல்ல வேண்டும்.
    03.05.2023 பிற்பகல் 3.30 மணிக்குள் அழகர் கோயிலுக்கு வாகனங்களில் வருபவர்கள் தேரோடும் வீதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை.
    இரு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களை தேரோடும் வீதியின் மேற்கு பக்கத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்த வேண்டும். வி.ஐ.பி., விவிஐபி- ன் கார்கள் மட்டும் தெப்பத்தின் கீழ்புறம் உள்ள வாகன
    நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.
    பஸ், வேன், டாடா
    ஏஸ் மற்றும் கார் ஆகிய வாகனங்களில் வருபவர்கள் தேரோடும் வீதியை தவிர்த்து தேரோடும் வீதியின் கிழக்கு பக்கம் உள்ள அந்தந்த வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
    அரசுத்துறை வாகனங்கள் அதற்கெனஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சுந்தரராச பெருமாள் கோவில் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

குறிப்பு:

  1. கோயிலின் உட்புறத்தில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களும் கள்ளழகர் மதுரைக்கு புறப்பட்டு கோட்டைவாசல் வந்து இடதுபுறம் திரும்பிசென்று மேலூர் ரோடு மண்டகப்படி முடித்து, மதுரை ரோடு மண்டகப்படி வந்தடைந்து, சத்திரப்பட்டி சந்திப்பு கடந்து செல்லும் வரை கோவில் வளாகத்திற்குள் இருந்துஎந்த வாகனமும் மதுரை சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் அனைத்தும் மேலூர் சாலை வழியாக மதுரை செல்ல வேண்டும்.
    காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களை தவிர அழகர் கோவிலில் இருந்து கடச்சனேந்தல் சந்திப்பு வரை சாலையின் இருபுறமும் எக்காரணத்தை கொண்டும் எந்த வாகனங்களையும் நிறுத்தக் கூடாது என போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *