• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பிரமோத் பகத்…

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இம்முறை முதல் முறையாக பேட்மிண்டன் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஆடவர் எஸ்.எல் 3 பிரிவு பாரா பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இறுதிபோட்டியில் இங்கிலாந்து வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் பிரமோத் வீழ்த்தினார். ஒடிசாவை சேர்ந்த 33 வயதாகும் பிரமோத் பகத் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்று தந்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. இதுவரை இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக்கில் 4-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மேலும், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர்.