2021-ம் ஆண்டிற்கான ’இந்திய திரை ஆளுமை விருது’ நடிகை ஹேம மாலினி மற்றும் பிரசூன் ஜோஷிக்கு வழங்கப்படுவாதக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தாகூர், “2021-ம் ஆண்டின் இந்திய திரைப்பட ஆளுமையாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேம மாலினி மற்றும் பாடலாசிரியரும் மத்திய திரைப்பட சான்றளிப்பு குழுவின் தலைவருமான பிரசூன் ஜோஷி ஆகியோரின் பெயர்களை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகம் முழுவதும் போற்றப்படும் மற்றும் மதிக்கப்படும் இந்திய சினிமாவின் ஆளுமைகள் இவர்கள். கோவாவில் நடைபெறவுள்ள 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்,” என்று கூறினார்.