• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தியன் வங்கி கிளையி கொள்ளை முயற்ச்சி: போலீசார் வலைவீச்சு

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள இந்தியன் பேங்க் கிளையில் நேற்று இரவு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில் வங்கியின் முன்புற டியூப் லைட்டு , சிசிடிவி கேமராக்களில் இணைப்புகளை துண்டித்தும் வங்கியின் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கொள்ளையர்கள் வங்கியின் உள்நுழைந்து பாதுகாப்பு அறையை திறக்க முயற்சித்த போது முடியாததால் திரும்பிச் சென்றுள்ளனர்

இதனால் வங்கியில் வைக்கப்பட்டிருந்த 30 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணங்கள் தப்பித்தன

இது குறித்து திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் ,மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆராயப்பட்டன.

கொள்ளை முயற்சி மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் பணம் நகைகள் எதும் கொள்ளை ஆக வில்லை என காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார் .

ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் இது போன்று இரண்டு முறை இதே வங்கிக்கு கொள்ளை அடிக்க முயற்சி நடந்துள்ளதை தொடர்ந்து இந்தமுறை ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற கொள்ளை கும்பல்லை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.