• Sat. Apr 20th, 2024

வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும்படி இந்தியா உயரும்.. ஆர்.பி.உதயகுமார் பேச்சு

Byகுமார்

Aug 16, 2022

வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா உயரும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.

மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா ஹோட்டல் ஜேசி ரெசிடென்சி அரங்கில் நடைபெற்றது. பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், ஆடிட்டர் சேது மாதவா, தொழிலதிபர்கள் வினோதன், சூரத் சுந்தரேசங்கர் உட்பட பலர் பேசினர்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சேவா ரத்னா விருதை வழங்கி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசியதாவது:-

நாடு சுதந்திரம் பெற எண்ணற்ற தேசத் தலைவர்கள் செய்த தியாகங்களை, இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லும் வண்ணம் கடந்த மூன்று தினங்களாக தேசிய கொடியை நான் வழங்கி வருகிறேன். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எத்தனையோ சுதந்திர தின விழா நடைபெற்று உள்ளது. ஆனால் அப்போதெல்லாம் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்களில் தான் தேசிய கொடி ஏற்றுவார்கள்.

ஆனால் இந்த 75வது சுதந்திர தின விழாவில் நாட்டுக்காக உழைத்த தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம், அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடியினை ஏற்றுமாறு பாரதப் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அரசின் சார்பிலேயே சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தற்போது இந்த சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளில் சேவை செய்த சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் பாரதி யுகேந்திர சார்பில், விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நீங்கள் பல்வேறு சாதனை புரிய இந்த விருது வாய்ப்பாக அமையும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கல்வி, பொருளாதாரம் உணவு உற்பத்தி ஆகியவற்றின் 15 சகவீதம் தான் இருந்தோம், ஆனால் இன்றைக்கு முன்னேறி மற்ற நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் நிலையில் நமது இந்தியா உயர்ந்திருக்கிறது. அது மட்டுமல்ல வருகின்ற 100 வது சுதந்திர தின விழாவில் கல்வியில், பொருளாதாரத்தில், உணவு உற்பத்தியில் 100% எட்டுவோம்.

மேலும் உலக வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் நமது இந்திய தேசம் உயரும் என்று பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை பாரதி யுகேந்திரா மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *