பகல்காமில் கடந்த 22 ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அனைத்து தாக்குதலையுமே நமது ராணுவ வீரர்கள் சாதுரியமாக முறியடித்தனர்.
இன்று இரு தரப்பு நாட்டு அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இன்று மாலை 5:00 மணி முதல் போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனைக் கொண்டாடும் விதமாக தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போர் நிறுத்தத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடினர்.