இந்திய வரலாற்றில் சுதந்திரம் அடைந்த இந்தியாவோடு இணைவதற்கு மறுத்த அன்றைய திருவிதாங்கூர் மன்னர் சித்திர திருநாளை, சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் பட்டேல், திருவிதாங்கூர் மீது காவல் துறை மூலம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பின்னே திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்திய ஒன்றிய அரசுடன்
இணைக்கப்பட்டது.
இந்தியாவிலே 100சதவீதம் எழுத்தறிவு பெற்ற மக்களவை கொண்ட முதல் மாநிலம். இந்திய தேர்தல் வரலாற்றில் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அன்றைய இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1957 _ல் ஈ.ஈம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில், காங்கிரஸ் அல்லாத மற்று கட்சி முதலாவதாக ஆட்சி அமைத்த மாநிலமும், இந்திய சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் மட்டுமே மாறி,மாறி ஆட்சி செய்யும் நிலையில், முதல்வர் பிரணணாய் விஜயன் தலைமையில் தொடர்ந்து கேரளாவில் இரண்டாவது முறையாக கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி தொடர்கிறது.
ராகுல் காந்தி கடந்த 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் “வயநாடு” மக்களவை தேர்தலில் போட்டியிட்டு முதல் தேர்தலில் 4_ லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும், 2024_ தேர்தலில் 3 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ்யை எதிர்த்த கட்சிகளுக்கு தோல்வியை பரிசாக கொடுத்து ராகுல் காந்தி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், வயநாடு ரேபெரலி என இரண்டு தொகுதிகளில் போட்டி இட்டு, இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றியை பெற்றார்.
இந்திய அரசு கட்டிலின் ஒரு சிறுபான்மை அரசின் பிரதமருமான நரேந்திர மோடிக்கு. ஒரு சிம்ம சொப்பனமாக, இந்திய நாடாளுமன்றத்தின் எதிர் கட்சி தலைவராக ராகுல் காந்தி அமர்ந்து விட்டார்.
ராகுல் காந்தி வெற்றி பெற்ற ரேபெரலி, வயநாடு என்ற இரண்டு மக்களவைத் தொகுதிகளில் வயநாடு தொகுதியில் அவரது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
வயநாடு மக்களவைத் தொகுதியில் நவம்பர் 13_ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வோட்பாளராக நாளை (அக்டோபர்_23)ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய மிகப் பெரிய வாகன அணி வகுப்பிற்கு(ரோடு ஷோ) கேரள காங்கிரஸ் ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் வேட்பாளர் பிரியங்கா காந்தி வயநாடு மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ராகுல் காந்தி, இவர்களின் அன்னையும், முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி என மூவரும் இன்று ( அக்டோபர்_22) வயநாடு வரவிருக்கிறனர்.
வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி கிட்டாது என 100 சதவீதம் தெரிந்தே. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முன்னாள் மாநில அமைச்சர் மொகேரி போட்டியிடுகிறார்.
பாஜகவின் சார்பில். கோழிக்கோடு மாநகராட்சியில் பாஜகவின் கவுன்சிலராக இரண்டாவது முறை வெற்றி பெற்றார் என்பதை கடந்து எந்த சாதனை தகவல்களும் இல்லாத நவ்யா ஹரிதாஸ் பாஜகவின் பலிகடா வேட்பாளர் என்ற நிலையில், பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களில் இரண்டாவது இடத்தை சிபிஐ பிடிக்கும். ஒரு வேளை சுயேட்சை வேட்பாளர்கள் யாராவது போட்டியிட்டால். 3_ வது இடமும் பாஜக விற்கு சிம்ம சொப்பனம் என்பதே. வேட்பு மனு தாக்கலுக்கு முந்திய நிலவரம் என்பதே வயநாடு வாக்காளர்களின் நிலைப்பாடு. இதற்கு காரணம். சில மாதங்களுக்கு முன் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் நிலச்சரிவில் சிக்கி மரணித்த உயிர்களின் எண்ணிக்கை 250_க்கும் அதிகம். தனி விமானம்,விலை உயர்ந்த ஆடை அணிந்து உலகை வலம் வரும் பிரதமர் இந்தியாவில் இருந்ததால். வயநாடு நிலச்சரிவு பகுதிகளை வந்து பார்வையிட்டார், பாதிக்கப்பட்ட மக்கள் படும் இன்னலை முகாம்களில் தங்கியிருந்த மக்களையும் பிரதமர் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி இன்னல் படும் மக்களுக்கு ஒன்றிய அரசின் சார்பில் எத்தகைய உதவியையும் இன்று வரை அறிவிக்கவில்லை..!!
மோடி அரசின் மாற்றான் தாய் மனோநிலையை கண்டித்து கேரள சட்டமன்றத்தில் சிபிஐ, காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகையை தொடர்ந்து 10_ நாட்கள் தொடர்ந்து வயநாடு தொகுதி முழுவதிலும் “கை”சின்னத்திற்கு வாக்காளர்களின் ஆதரவை திரட்ட திட்டம் இட்டு உள்ளார் என திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநிலம் தலைமை காங்கிரஸ் அலுவலகம் செய்தி குறிப்பில் காணமுடிந்தது.
வயநாடு வாக்கு பதிவிற்கு முந்திய நாள் வரை விழாக்கோலம் காணும் நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என இந்திய சுதந்திர சிற்பிகளில் ஒருவரான ஆசிய ஜோதி நேருவின் குடும்ப வாரிசுகளின் வயநாடு தொகுதி வலம் உணர்த்தும். உலகின் பழமை சொல்லான சாலைகள் எல்லாம் வற்றிகானை நோக்கியே, என்ற வாசகத்தின் புது மொழி இந்திய மக்களின் பார்வை எல்லாம் “வயநாடு” தொகுதியை நோக்கியே என்பது இந்தியாவில் இன்றைய புது வரலாறாக.