மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கலில் செயல்படும் மாநகராட்சி முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்,

இங்குள்ள முதியோர்களுக்கு உணவு தயாரிக்க மளிகை பொருட்கள் தேவைப்படுவதாக கோரிக்கை வந்தது. இதனையடுத்து ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வழங்கினேன் என்றார். முதியோர்களும், இல்ல பொறுப்பாளரும் மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்தனர்.




