மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் எம் வி எம் மருதுபாண்டியன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

பள்ளி நிர்வாகி எம் வள்ளிமயில் எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கி தேசிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பள்ளி முதல்வர் தீபா ராகினி வரவேற்றார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் சுதந்திரக்காக போராடிய தலைவர்களின் வாழ்க்கை குறித்த நாடகங்கள், பேச்சுப்போட்டி , நடன நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் மாணவ மாணவியர் ஆசிரியர் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.