• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

வீட்டில் செல்வம் பெருக.. இந்த பொருட்களை வையுங்கள்…

Byகாயத்ரி

Sep 28, 2022

வீட்டில் செல்வவளம் பெருக வேண்டுமானால் அதற்கு வாஸ்து பலம் பெற்றிருக்க வேண்டும். அதற்கு சில நியமனங்களைக் கடைப்பிடித்தால் மட்டுமே போதும்.. வாருங்கள் பார்க்கலாம்.

பொருட்கள் ஒரு வீட்டிற்கு அவசியமாகும்போது அங்கே செல்வவளம் பெருக வேண்டியதும் கட்டாயமாகிறது. அப்படி வீட்டில் செல்வவளம் பெருக என்ன செய்ய வேண்டும் தெரியுமா??.. உங்கள் வாழ்க்கை தரத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். வீட்டில் வாஸ்து பலம் பெருகினால் செல்வவளம் தானாக பெருகும்.. அதற்கு சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களை சரியான இடத்தில், சரியான திசையில் வைப்பதன் மூலம் வாஸ்து பிரச்சனைகளை சரிசெய்ய முடியும். அதேபோல் சில எளிய பொருட்களை வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம், உங்கள் வீட்டில் அஷ்ட லட்சுமியை வசிக்க வைக்க முடியும். அந்தவகையில் வீட்டில் நடண கணபதி, வலம்புரி சங்கு, குபேரன் சிலை மற்றும் புல்லாங்குழல் போன்றவற்றை வைக்கலாம் .

*உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் இருந்தால் அப்போது நீங்கள் நடண கணபதி சிலை ஒன்றை வாங்கி வைக்க வேண்டும். வீட்டின் வாசலுக்கு நேராக இருக்குமாறு, அதாவது வீட்டிற்குள் நுழைபவர்கள் கண்ணில் படுமாறு நாட்டிய கணபதி சிலையை வைக்கும்போது, வீட்டிற்கு செல்வத்தை வரவழைக்கும். இந்த நாட்டிய விநாயாகர் செல்வத்தையும், சந்தோஷத்தையும் குறிக்கும் அடையாளமாகத் திகழ்கிறார்.

*லட்சுமி தேவி தன்னுடைய கையில் சங்கினை வைத்திருப்பது போன்ற படங்களை வீட்டில் வைத்திருப்பது சிறப்பு. அத்துடன் வீட்டின் பூஜை அறையில், வலம்புரி சங்கு வைத்திருப்பது பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.. எத்தகைய வாஸ்து தோஷங்களையும் நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த வலம்புரிச் சங்குக்கு உண்டு.

*அதேபோல், குபேரன் சிலை, வீடு, கடை, தொழில், நிறுவனம், கடை போன்ற இடங்களில் குபேரன் சிலை வைத்திருப்பது சிறப்பானது. எப்போதும் குபேரன் சிலையை வடக்கு திசை பார்த்து வைத்திருப்பது தொழிலில் லாபத்தை கொடுக்கும். அதிலும் பண மூட்டையுடன் இருக்கும் குபேரன் சிலை அதிக நன்மைகளைத் தரக்கூடியது,

*புல்லாங்குழல் .. மனதுக்கு இனிமையான இசையை கொடுப்பதோடு, வீட்டுக்கு அதிர்ஷத்தையும் கொடுக்கிறது. புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், கஷ்டங்கள் தீர்ந்து, லட்சுமி தேவி குடிகொள்வாள். கிருஷ்ணபகவானுக்கு உகந்த புல்லாங்குழல் , அனைத்து வாஸ்த் ஷோஷங்களையும் நீக்க வல்லது.

இவையெல்லாம் செல்வம் பெருக வழி செய்து உங்ளின் வாழ்க்கையை மேம்படுத்தும்…