• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு..!

Byவிஷா

Oct 10, 2023

சீனாவில் கடுமையான வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக் கழகம் சமீபத்தில் உலக அளவில் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,
“உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. அங்கு. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிக்கின்றனர் கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட இது சுமார் இரு மடங்கு அதிகம் ஆகும்.
அரசின் சில முரண்பாடான கொள்கைகளே இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று ஒரே குழந்தை திட்டம். இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னும் உள்ளது.
தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் உலகளாவிய வினியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே மற்ற நாடுகளின் வெற்றிகரமான முயற்சிகளில் இருந்து சீனா உரிய முடிவை எடுக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.