• Mon. Dec 9th, 2024

பிரபல தயாரிப்பாளரின் தந்தை மறைவு – பிரபலங்கள் இரங்கல்..!

Byவிஷா

Oct 10, 2023

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருந்து வருபவர் தில் ராஜு. இவருடைய தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி காலமானார் . இவருக்கு வயது 86. சமீபத்தில் தமிழில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட வாரிசு திரைப்படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தில் ராஜுவின் தந்தை ஷியாம் சுந்தர் ரெட்டி சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். உடல் நலக்குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக தில் ராஜுவின் தந்தை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.