நாகை – இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து அக்.12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று முன் தினம் நாகை-இலங்கை இடையே நேற்று பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த சோதனை ஓட்டத்தை கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் நடத்தினர். ஏற்கனவே இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) பயணிகளுடன் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருந்த இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த கப்பல் போக்குவரத்து நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், 12 ஆம் தேதி காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.