• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பவானிசாகர் அணையிலிருந்து திறக்கும் நீரின் அளவு அதிகரிப்பு

Byமதி

Nov 8, 2021

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில், பவானிசாகர் அணையின் நீர்மட்டம், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 103 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் 103.72 அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி, அணையிலிருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு ஆறாயிரத்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கீழ் பவானி வாய்க்காலில் ஆயிரத்து 800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.