• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு…

Byகாயத்ரி

Nov 6, 2021

தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து நச்சுப் புகை காரணமாக தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம பகுதிகளிலும் இரண்டாவது நாளாக இன்றும் கடுமையான காற்று மாசு உருவாகியுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக் காட்டிலும் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.

தீபாவளி கொண்டாட்டத்தை தொடர்ந்து நச்சுப் புகை காரணமாக தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம பகுதிகளிலும் இரண்டாவது நாளாக இன்றும் கடுமையான காற்று மாசு உருவாகியுள்ளது.

காலை 6 மணியளவில் டெல்லியின் காற்று மாசு அளவு 533 பிஎம் அளவில் இருந்தது. நொய்டா, குருகிராம், காசியாபாத் மற்றும் கிரேட்டர் நொய்டாவின் அருகிலுள்ள பகுதிகளில் காற்று மாசு அதிகமாக இருந்தது.டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியாணா அரசுகளால் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டபோதும் மக்கள் தடையை மீறி வெடித்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.