• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

கொரோனாவால் கழுதைபுலிக்கும் பாதிப்பு!

Byகாயத்ரி

Nov 6, 2021

உலகிலேயே முதல்முறையாக, அமெரிக்காவில் டென்வர் உயிரியல் பூங்காவில் இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன், சிங்கங்கள், புலிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கழுதைப்புலியும் பாதிக்கப்பட்டுள்ளது.


உயிரியல் பூங்காவில் உள்ள 22வயதான கோஸி, 23வயதான கிபோ ஆகிய இரு கழுதைப்புலிகளுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரு கழுதைப்புலிகளுக்கும் அடிக்கடி இருமல், மூக்கில் சளிவருதல், சோர்வடைந்திருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.


கழுதைப்புலிகள் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் அனைத்தும் கொலராடோ பல்கலைக்கழக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டு கரோனா இருப்பது உறுதி செய்யப்படன. இதுவரை டென்வர் உயிரியில் பூங்காவில் 2 கழுதைப்புலிகள், 11 சிங்கங்கள், 2 புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.