• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..

Byகாயத்ரி

Aug 2, 2022

பிரபல திரைப்பட பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர் மதுரை அன்புசெழியன் வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் அன்புசெழியன் கோடிக்கணக்கில் திரைப்படங்கள் தயாரிப்பவர்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் திரைப்பட பைனான்சியர் அன்புசெழியனின்மதுரை வீடு உள்பட சென்னையில் உள்ள மூன்று இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் திடீரென சோதனை செய்து வருகின்றனர். மதுரையில் அன்புசெழியனுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாகவும் இந்த சோதனையின் முடிவில் தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்ற தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான ’தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை மிகப் பெரிய தொகை கொடுத்து அன்புசெழியன் பெற்றிருந்ததாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.