குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ஐந்து கோவில்களில் திருக்கார்த்திகை “சொக்கப்பனை” யில் தீ பற்றவைத்த நிகழ்வுகள்
குமரி மாவட்டத்தில் கார்த்திகை தீபம் திருநாள் இரவு, குமரியின் புகழ்பெற்ற. கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், தக்கலை குமாரா கோயில் முருகன் கோயில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் சாமி கோவில்களில் இன்று இரவு(டிசம்பர்_13) நாள் இரவு திருக்கார்த்திகை திருநாள் தீபம் ஏற்றும் பழமையான அய்திகமான “சொக்கப்பனை” பற்றவைக்கும் நிகழ்வுகளின் வரிசையில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் நடைபெற்ற சொக்கப்பனை பற்றவைக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


சுசீந்திரம், கன்னியாகுமரி கோவில்களில் நடைபெற்ற சொக்கப்பனை பற்றவைக்கும் நிகழ்வில் பன்மொழி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்வை செல்லில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.







