• Fri. Jan 17th, 2025

விஜய்வசந்த் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்…

குமரியில் சுற்றுலா இடங்களை உலகு தரத்திற்கு அழகு படுத்தல் வேண்டும் என விஜய்வசந்த் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

இயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக கன்னியாகுமரி மாவட்டத்தை மாற்ற இயலும். எனவே மத்திய அரசு இதற்காக போதிய நிதி ஒதுக்கி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் மழை கடல் ஆறுகள் அருவிகள் வழிபாட்டுத்தலங்கள் என இயற்கை அழகு நிறைந்து காணப்பட்ட போதிலும் இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் உலக புகழ் வாய்ந்த விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலை போன்ற இடங்கள் இங்கு இருந்த போதிலும் புதிய சாலை வசதிகள், ரயில் வசதிகள் மற்றும் விமான நிலையம் இல்லாத காரணத்தால் மிகவும் ஆற்றல் வளம் மிக்க கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாத் துறையில் போதிய வளர்ச்சியை எட்ட வில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதில் அதிக கவனம் செலுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தை உலக சுற்றுலா தலங்களின் வரைபடத்தில் கொண்டு சேர்க்க போதிய நிதியினை ஒதுக்க வேண்டும்.
இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் இந்தியாவின் சுற்றுலாவையும் மேம்படுத்த உதவும் என்பதை கூறிக்கொள்கிறேன்.