• Fri. Apr 18th, 2025

மதுரை-செக்கானூரணியில் ஆண்களுக்கான ட்ரோன் பிட்னஸ் கிளப் திறப்பு விழா

ByKalamegam Viswanathan

Mar 6, 2023

செக்கானூரணியில் ஆண்களுக்கான ட்ரோன் பிட்னஸ் கிளப் திறப்பு விழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் செக்கானூரணி மெயின் ரோட்டில் ஆடவருக்கான நவநாகரீக ட்ரோன் பிட்னஸ் கிளப்பினை அமெச்சூர் ஒலிம்பியாட்டில் தங்கமெடல் வென்ற கோவையைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர் தலைமை வகித்தார். உரிமையாளர் வினோத் குமார் முன்னிலை வகித்தார். இதில் செக்கானூரணி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள், உறவினர்கள் குடும்பத்தினர்கள் நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.