• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பசுமலை பயிற்சி மையத்தில் ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு:

ByKalamegam Viswanathan

Sep 5, 2023

மதுரை, பசுமலை தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் யு.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி திறன் மேம்பாட்டு சாதனத்தை திறந்து வைத்து பேசும் போது:

மதுரை மண்டலத்தில் 890 பேருந்துகளில் 1.68 கோடி மகளிர்கள் கடந்த மாதத்தில் மட்டுமே பயணம் செய்துள்ளார்கள்.
5.50 இலட்சம் மகளிர்கள் கட்டணமில்லா பேருந்தில் தினசரி பயணம் செய்கிறார்கள்.
மேலும், இப்போது திறந்து வைத்துள்ள திறன் மேம்பாட்டு சாதனம் மூலம் ஓட்டுநர்களின் திறன் அதிகரித்து விபத்து இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி மையத்தின் மூலம் மனவள கலை மற்றும் தியானப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டல பொது மேலாளர் ஊ.மு.ராகவன் தொமுச தொழிற்சங்க தலைவர் அல்போன்ஸ் இணை இயக்குனர் (மக்கள் தொடர்பு) சு.பாஸ்கரன், அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் பு.சந்தானகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.