

குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறையின் நான்கு திருக்கோயில்களில் திருப்பணிகள் துவக்க விழா அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் நடந்தது.
குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி அருள்மிகு கலிங்கமுகத்து பூதத்தார் திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்பு 2023-24 ன்படி திருக் கோயில் நிதி ரூ. 17 லட்சம் செலவில், கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் துவக்க விழா, பூஜை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, பொறியாளர் ரமேஷ், ஸ்ரீ காரியம் சேர்மராஜா, திமுக பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி சேதுவேல், கழக பேச்சாளர் செல்வகுமார், கழக நிர்வாகிகள் நாகராஜன், ஜோசப், ஆரல் சுரேஷ், ஆசை நீலகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.



ஆரல்வாய்மொழி கோட்டை கரை கண்டன் சாஸ்தா திருக்கோயில் ரூ.10 லட்சம் செலவில் திருப்பணி வேலைகளும், சுசீந்திரம் அருள்மிகு சாட்சி விநாயகர் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் ரூ.4.30 இலட்சம் செலவிலும், மந்தாரம் புதூர் அருள்மிகு தாமோதர விநாயகர் திருக்கோயில் திருப்பணி வேலைகள் ரூ.6.90 இலட்சம் செலவில் நடை பெறுகிறது.

இதற்கான பணிகளும் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், குமரி மாவட்ட இணை ஆணையர் பழனிக்குமார், பொறியாளர் ராஜ்குமார், ஸ்ரீ காரியம் ஹரிபத்ம நாபன், திமுக பேரூர் செயலாளர் சுதை சுந்தர், திமுக நிர்வாகிகள் கதிரேசன், சைலா ஐயப்பன், சுசீந்திரம் இயல் இசை நாடகம் சங்க தலைவர் சிவதாணு பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.

