• Tue. Oct 27th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

ByPrabhu Sekar

Oct 27, 2026

தாம்பரம் மாநகராட்சியின் 50-வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாதபுரத்தில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டி, அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் எம். யாக்கூப் கலந்து கொண்டு, 100 தூய்மைப் பணியாளர்களுக்கு மழைக்கோட், போர்வை, பிரியாணி மற்றும் இனிப்புகளை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், பொருளாளர் சபியுல்லா, மாநில இளைஞரணிச் செயலாளர் தமீமும் அன்சாரி, உள்ளிட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொண்ட தூய்மைப் பணியாளர்கள், மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துச் சென்றனர்.