புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா வரும் மே 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது , நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை விடுத்துள்ளனஇந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த நிலையில், 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க உள்ளதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்கும் சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக பங்கேற்கிறது. அதேபோல தேசிய அளவில் ஷிரோன்மணி அகாலி தளம், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, சிராக் பஸ்வானின் லோக் ஜனநாயக கட்சி பங்கேற்கின்றன.