

வேலூர் அரசியல் வட்டாரங்களில் தற்போது, சாதி சற்று தலை தூக்கி இருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன!இதில், எஸ் ஆர் கே அப்பு என்பவரின் பெயர்தான் அரசல் புரசலாக பேசப்படுகிறது! மேலும் அதிமுகவுக்கான இவரது பணிகள் குறைவு என்றும் கட்சி வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்! மூன்று முறை மாவட்ட செயலாளராக இருந்தும் மக்களுக்காக எதுவும் செய்யப்படவில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.. அரசியல் ஜாம்பவான் துரைமுருகனை எதிர்த்து நின்று இரண்டு முறை தோல்வி கண்டார்.. 40 ஆண்டுகளுக்கு மேல் காட்பாடி தொகுதியில் இருந்த துரைமுருகனை பற்றி, எஸ்.ஆர்.கே அரசியல் கூட்டங்களில் பேசியவை தான் தோல்வியுற செய்தது என அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்!
இவருக்கு எதிராக ஜனனி சதீஷ்குமார் 2010ஆம் ஆண்டு அதிமுக அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டாலும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு மேலோங்கி இருந்தது! இதனால், மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஜனனி சதீஷை அழைப்பது கிடையாது..
மேலும் வேலூர் மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு ஏதும் செய்யாமல், எஸ்.ஆர்.கே தனது சமுதாயத்தினருக்கு மட்டும் நிறைய சலுகைகள் செய்ததாகவும் சொல்கின்றனர்! இதை அறிந்த ஜனனி சதீஷ், அனைவருமே சமம் என்று அழைத்ததால் தகவல் தொகுப்பு மாவட்ட செயலாளராக இருந்தவர் பதவி உயர்வு பெற்று மண்டல செயலாளர் ஆக மாறினார்..


மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல், கட்சி மட்டுமின்றி, தன் மக்களையும் வளர்த்தனர்!
ஆனால் இப்பொழுது, அதிமுக கட்சியில், வேலூர் கோட்டையை யார் பிடிப்பது என்ற போட்டி மட்டுமே நிலவுகிறது! இப்போட்டி நீங்கினால் மட்டுமே, திமுக என்ற கட்சி வேலூர் மாவட்டத்தில் வளரும் என்ற ஆதங்கத்துடன் ஏழை கட்சியினர் கூறி வருகின்றனர்!