• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் 9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்பது வதந்தி- பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

ByA.Tamilselvan

Apr 29, 2022

1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற தகவல் பரவி வருகிறது.இது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம்அளித்துள்ளது.
புதுவையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அவ்வாறு வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இது தவறு என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை கூறியிருப்பதாவது:
புதுவையில் அறிவிக்கப்பட்டிருப்பதுபோல தேர்வு இல்லாமல் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ் அறிவிக்கப்படும் என்பது தவறு.குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கட்டாயம் இறுதித்தேர்வு நடத்தப்படும். திட்டமிட்டபடி அடுத்த மாதம் (மே) 6 முதல் 13ந்தேதிக்குள் தேர்வு நடத்தி முடிக்கப்படும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை கூறி உள்ளது.