• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் பருப்பு விலை அதிரடியாகக் குறைப்பு..!

Byவிஷா

Jan 8, 2024

தற்போது பருப்புகளின் கொள்முதல் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விருதுநகர் சந்தையில் பருப்புகளின் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வியாபார நகரமான, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தான் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி, சில மாதங்களாக தமிழகத்தில் பருப்புகளின் உற்பத்தி போதுமான அளவில் இல்லாத காரணத்தினால் அனைத்து பருப்புகளின் விலையும் திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனிடையே, தற்போது பருப்புகளின் கொள்முதல் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் விருதுநகர் சந்தையில் பருப்புகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, துவரம்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.1400 குறைந்து ரூ. 12,600க்கும், பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 10,200க்கும், உளுந்தம் பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ.10,000க்கும், பட்டாணி 100 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ. 6400க்கும், மைதா 90 கிலோவிற்கு ரூ.100 குறைந்து ரூ. 4280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பருப்பு வகைகள் மட்டுமல்லாமல் அனைத்து எண்ணெய் வகைகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.
க.எண்ணெய் 15 கிலோ ரூ 30 குறைந்து ரூ. 2800, ந.எண்ணெய் 15 கிலோ ரூ. 7095, பாமாலின் 15 கிலோவிற்கு ரூ. 15 குறைந்து ரூ. 1325, சர்க்கரை 50 கிலோ ரூ. 2070, மைதா 90 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 4280, பொரிகடலை 55 கிலோ ரூ. 5000, ரவை 30 கிலோ ரூ. 1480, கொண்டக்கடலை 100 கிலோ ரூ. 6200 என விற்கப்படுகிறது.