• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே பள்ளிகளில், ஆண்டு விழா:

ByKalamegam Viswanathan

Feb 13, 2024

மதுரை மாவட்டம், கருப்பட்டி, முள்ளிப் பள்ளம் பள்ளிகளில், ஆண்டு விழா பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கருப்பட்டி, முள்ளி பள்ளம், ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவில், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், மதுரையில் நடந்த கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கருப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு, இரும்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் தலைமை தாங்கினார்.
பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஆண்டி முன்னிலை வகித்தார் .
தலைமை ஆசிரியர் மலர்விழி வரவேற்றார் .
பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில், மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது. இதேபோல், முள்ளிப்பள்ளம், அரசு பள்ளியில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார் .
துணைத் தலைவர் கேபிள்ராஜா முன்னிலை வகித்தார். ஒன்றியக் கவுன்சில் கார்த்திகா ஞானசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகளும் நடந்தது . சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு, பேரூராட்சி த்தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சின்னப்பாண்டி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகானந்தம் மேலாண்மை குழு தலைவர் இலக்கியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
தலைமை ஆசிரியை தீபா வரவேற்றார் ஆசிரியர்கள் பிரசன்னா குமார் ஜெஸ்ஸி ஆகியோர் பேசினார்கள். ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார். மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது பல்வேறு போட்டியில் கலந்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது. மதுரையில் நடந்த கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.