• Wed. Mar 19th, 2025

அரசு மருத்துவமனைக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அறக்கட்டளைக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா பாராட்டு:

ByKalamegam Viswanathan

Feb 13, 2024

மதுரை மாவட்டம், பரவை மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல்.அறக்கட்டளை பல்வேறு துறைகளுக்கு பல்வேறு சமூக பணிகள் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மருத்துவத்துறையில் சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதல் கட்டமாக ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், டெங்கு ஒழிப்பு கருவிகள் வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக ரூ.2.50லட்சம் மதிப்பீட்டில் நேற்று மருத்துவ உபகரணங்கள் இ.சி.ஜி மருத்துவ கருவி, 5 இரத்த அழுத்த மானிட்டர்கள், 2 ஹவி கொசு மருந்து இயந்திரங்கள், 130 தகவல் பதாகைகள்,ஆரம்ப சுகாதார நிலையத்தின் பிரசவ வார்டுக்கு கொசு வலைகள் போன்ற அத்தியா பொருட்களை, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவிடம் வழங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் சேவையை பாராட்டி மாவட்ட ஆட்சியர், பாராட்டு சான்றிதழை வழங்கினார். இதில், துணை இயக்குநர் சுகாதார பணிகள் குமரகுருபரன், சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் வரலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்லையா, ஜி.ஹச்.சி.எல். தொழில்துறை உறவுகள் தலைவர் அசோக்குமார், சமூக அலுவலர் சுஜீன் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.