• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரையில் கஞ்சா வழக்கில் பரோலில் வந்த வாலிபர் தப்பி ஓட்டம்.., போலீசார் வலைவீச்சு

ByKalamegam Viswanathan

Sep 8, 2024

மதுரை வனையங்குளத்தை அடுத்துள்ள பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி இவரது மகன் காளி (எ) கலாம் காளி (வயது 24) இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி பரோலில் வளையன் குளம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் காளி காலையிலிருந்து தலைமறைவானார். இதனையடுத்து பெருங்குடி போலீஸார் தலைமறைவான குற்றவாளி கலாம் காளியை தேடி வருகின்றனர்.

பரோலில் (பிணையில்) வெளிவந்த குற்றவாளி தப்பி ஓடிய சம்பவம் போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. பரோல் குற்றவாளி தப்பிய சம்பவம் வலையன்குளம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.