• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தற்காலிக ஊழியர், பணி நீக்கம் செய்ததால் மனமுடைந்து தற்கொலை..!

ByP.Thangapandi

Aug 28, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தாக கூறப்படுகிறது.,

இவரை ஒரு சில காரணங்களால் பணியிலிருந்து நீக்கிவிட்டு வேறு நபரை பணியில் அமர்த்தியதாக குற்றம்சாட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த ,17 ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.,

அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.,

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்டவருக்கு நீதி வழங்க வேண்டும் என அல்லிகுண்டம் விலக்கு பகுதியில் உறவினர்கள் இறந்த சுந்தர்ராஜ் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி வட்டாச்சியர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, உறவினர்களின் கோரிக்கையான குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டு இறந்தவரின் உடலை தகனம் செய்தனர்.,

இந்த சாலை மறியல் போராட்டத்தால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.,